காயல்பட்டினம் நகரின் பள்ளி மாணவர்களுக்கான யுனைட்டெட் ,புட்பால் லீக் - UFL கால்பந்து சுற்றுப்போட்டி ஆகஸ்ட் 29, 30 நாட்களில் (சனி, ஞாயிறு), ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
பள்ளிக்கூடங்களில் 06 முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கொண்டு, KP Hardrockers, Gallery Birds, Spanish Soccers, Soccers Smashers ஆகிய நான்கு அணிகள் இப்போட்டிகளில் லீக் முறையில் மோதின.
அரையிறுதியில் வென்றதன் மூலம், காலரி பேர்ட்ஸ் அணியும், KP Hard Rockers அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.
30.08.2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், KP Hard Rockers அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மஃரிப் தொழுகைக்குப் பின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. துவக்கமாக, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து போட்டி நடுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதிப்போட்டியில் வென்ற - இரண்டாமிடம் பெற்ற அணிகளுக்கு பணப்பரிசுகளும், கோப்பையும் வழங்கப்பட்டன.
ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் பீ.எஸ்.எம்.இல்யாஸ், கேப்டன் ஹபீப், பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, பரிசுகளை வழங்கினர்.
இச்சுற்றுப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்களான ஜமால், இஸ்மாஈல், மீராத்தம்பி, நெய்னா முஹம்மத் ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் ஜமால்
மற்றும் ஹாங்காங்கிலிருந்து...
S.H.ஹபீபுர்ரஹ்மான்
நடப்பாண்டு யுனைட்டெட் ,புட்பால் லீக் போட்டிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |