இவ்வாண்டு, காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு (ஹிஃப்ழு) மத்ரஸாவின் ஆசிரியர் ஹஜ் பயணம் மேற்கொள்வதையொட்டி, மத்ரஸா இயங்கி வரும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் வழியனுப்பு நிகழ்ச்சி, 01.09.2015 செவ்வாய்க்கிழமையன்று 20.30 மணியளவில், ஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக் தலைமையில் நடைபெற்றது.
எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நெறிப்படுத்தினார். மாணவர்களான ஜெ.எஸ்.அல்தாஃப் அஹ்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, ஹாஃபிழ் பி.ஏ.ஷம்சுத்தீன் ஸூஃபீ வரவேற்புரையாற்ற, தொடர்ந்து அனைவுரும் எழுந்து நின்று, ‘லுத்பில் இலாஹி’ எனும் இறைவேண்டற்கவியைப் பாடினர். பைத் பிரிவு மாணவர்களால் நபிகளார் புகழ்பாடலும் பாடப்பட்டது. மாணவர்கள் சார்பாக டீ.ஏ.நூஹ் நஜீயுல்லாஹ் வாழ்த்து மடலை வாசிக்க, மாணவர்கள் எஸ்.எச்.அலீ ஃபஹத், ஜெ.எஸ்.அல்தாஃப் அஹ்மத், ஹாஃபிழ் ஸாலிஹ் நுஸ்கீ ஆகியோர் வாழ்த்துப் பண் பாடினர். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
நடப்பாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள - ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிபை அறிமுகப்படுத்தியும், அவருக்கு வாழ்த்தும், பிரார்த்தனையும் செய்தும் - மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நன்றி கூற, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.
பின்னர், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் மத்ரஸா ஆசிரியருடன் அனைவரும் முஸாஃபஹா (கைலாகு) செய்தனர். அவர்களிடம், தனது ஹஜ் பயணம் இறைவனால் ஏற்கப்பட பிரார்த்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தகவல்:
ஹாஃபிழ் M.I.K.செய்யித் அபூதாஹிர்
ஹாமிதிய்யா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |