சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் 37ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, மாணவியர் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியுள்ளது. விபரம் வருமாறு:-
விளையாட்டு விழா
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிக்கும் விழா, 21.08.2015 அன்று 10.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவி எம்.எல்.ஆஸியா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். விழாவிற்குத் தலைமை தாங்கிய - பள்ளியின் தலைமையாசிரியை மு.ஜெஸீமா தலைமையுரையாற்றினார். கணித ஆசிரியை பீர் ஃபாத்திமா பீவி முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியை வி.நர்மதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, மாணவியர் கூட்டு உடற்பயிச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆண்டு விழா
அன்று 15.00 மணியளவில், பள்ளியின் 37ஆவது ஆண்டு விழா, வாவு எஸ்.அப்துல் கஃப்பார் தலைமையில் நடைபெற்றது.
ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரும் - சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவியருமான டாக்டர் கே.எஸ்.எம்.பி.ஃபாத்திமா, ஹாஃபிழ் டபிள்யு.சி.ஷேக் ஃபாத்திமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
பள்ளி மாணவி எம்.எல்.ஆயிஷா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஆசிரியை ஜெனிட்டா அனைவரையும் வரவேற்றார். தலைமையாசிரியை மு.ஜெஸீமா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
பரிசளிப்பு
இவ்விழாவில. 2014-2015 கல்வியாண்டில், பள்ளியளவில் முதல் இரண்டிடங்களைப் பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
துவக்கமாக, கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற - பள்ளியின் ஆண்டிறுதித் தேர்வில், வகுப்பு வாரியாக முதல் இரண்டிடங்களைப் பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற ஏ.கதீஜா ரிழ்வின் (1144/1200), எச்.அஸ்மா ஸப்ரீன் (1137/1200), எம்.எஸ்.சுஜிதா ராணி (1118/1200) ஆகிய மாணவியருக்கு முறையே 1000, 750, 500 ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
12ஆம் வகுப்பில் தனிப்பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற ஏ.கதீஜா ரிழ்வின் (கணிதம்), டி.குபேர லட்சுமி (கணிதம்), பாளையம் நஃபீஸத் ஆமினா (கணிதம்), எச்.அஸ்மா ஸப்ரீன் (கணக்குப் பதிவியல்), எம்.என்.ராபியா நஸ் ரீன் (கணக்குப் பதிவியல்) ஆகிய 5 மாணவியருக்கு தலா 500 பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அரபி மொழி பாடத்தில், 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்ற எஸ்.எம்.பி.முஹம்மத் ஃபாத்திமா (மொத்த மதிப்பெண்கள் 1053), பாளையம் நஃபீஸத் ஆமினா (மொத்த மதிப்பெண்கள் 1049) ஆகிய மாணவியருக்கு முறையே 2 ஆயிரம், 1 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற, ஜெ.ஏ.கிதுரு ஃபாத்திமா (487/500 - முதலிடம்), என்.கே.எம்.முத்து ஆயிஷா ரிஃப்கா (487/500 - முதலிடம்), எம்.எஸ்.ரஸீக்கா (484/500 - இரண்டாமிடம்), கே.எஸ்.எஸ்.ஆயிஷா மஃரூஃபா (483/500 - மூன்றாமிடம்), டி.ரெஜினா நிலோஃபர் (483/500 - மூன்றாமிடம்) ஆகிய மாணவியருக்கு முறையே 1000, 750, 500 ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
10ஆம் வகுப்பில் தனிப்பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற
ஜெ.ஏ.கிதுரு ஃபாத்திமா (கணக்கு), என்.கே.எம்.முத்து ஆயிஷா ரிஃப்கா (கணக்கு), எம்.எஸ்.ரஸீக்கா (கணக்கு), ஏ.ஆர்.ஹலீமா நஸ் ரீன் (கணக்கு),
ஜெ.ஏ.கிதுரு ஃபாத்திமா (அறிவியல்), என்.கே.எம்.முத்து ஆயிஷா ரிஃப்கா (அறிவியல்), யு.ஜி.ஷீரின் மீரா (அறிவியல்), ஏ.எம்.அஃப்னான் (அறிவியல்), எம்.டீ.அஹ்மத் அல்ஃபிய்யா (அறிவியல்), எம்.பரமேஸ்வரி (அறிவியல்), டி.ரெஜினா நிலோஃபர் (அறிவியல்), எம்.டீ.ஜஹ்ரா நஃபீலா (அறிவியல்), யு.என்.ஷர்மிலி முஷ்ஃபிரா பேகம் (அறிவியல்), எஸ்.எச்.ஃபாத்திமா மஃப்ரூஹா (அறிவியல்), ஆயிஷா மஃப்ரூஹா (அறிவியல்), டீ.அபிராமி (அறிவியல்), கே.எம்.முஹம்மத் அப்துல் காதிர் உம்மாள் (அறிவியல்),
எம்.டீ.அஹ்மத் அல்ஃபிய்யா (சமூக அறிவியல்), கே.எம்.முஹம்மத் அப்துல் காதிர் உம்மாள் (சமூக அறிவியல்), என்.செய்யித் பத்தூல் (சமூக அறிவியல்), எஸ்.பவதாரணி (சமூக அறிவியல்), டீ.அபிராமி (சமூக அறிவியல்)
ஆகிய 22 மாணவியருக்கு தலா 250 ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் டாக்டர் கே.எஸ்.எம்.பி.ஃபாத்திமா, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
பரிசளிப்பைத் தொடர்ந்து மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நன்றியுரையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
விழா ஏற்பாடுகளை, பள்ளியின் தாளாளர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் ஒருங்கிணைப்பில், தலைமையாசிரியை, ஆசிரியையர், அலுவலர்கள் செய்திருந்தனர்.
கடந்தாண்டு (2014) நடைபெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் ஆண்டுவிழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சில படங்கள் அகற்றப்பட்டன @ 11:58 / 04.09.2015] |