திருமணம் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுக்கும் பணியைச் செய்து வந்த - காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்தவரும், குலாம் ஸாஹிப் தம்பி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவருமான - ஹாஜி என்.டீ.அப்துல் லத்தீஃப் என்ற ‘அடாப் லத்தீஃப், இன்று நண்பகல் 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
மர்ஹூம் நூஹுத்தம்பி அவர்களின் மகனும்,
மர்ஹூம் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,
‘அடாப்’ இஸ்மாஈல் என்பவரின் சகோதரரும்,
ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +91 98655 91183), முத்துவாப்பா, காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் அபுல்ஹஸன் ஆலிம், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ ஆகியோரின் மச்சானும்,
செய்யித் முஹம்மத், செய்யித் அஹ்மத், முஹம்மத் காதிர் ஆகியோரின் தாய்மாமாவும்,
அஷ்ரஃப் அலீ என்பவரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று இஷா ஜமாஅத் வேளையில் சிறிய குத்பா பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டு, ஜமாஅத் நிறைவுற்றதும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
கூடுதல் விபரங்கள்:
‘அம்பலம்’ ஸாலிஹ்
ஹாஃபிழ் முஹம்மத் அலீ |