சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை (MEET THE STATE TOPPERS) - 2015 நிகழ்ச்சி, செப்டம்பர் 5, 2015 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
2006ம் ஆண்டு முதல், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பு மற்றும் இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு காயல்பட்டினம் கே.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அன்று காலை 10:00 மணியளவில் சாதனை மாணவிகளுடன், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவியர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் - இவ்வாண்டு மாநில அளவில், பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் பவித்ரா மற்றும் நிவேதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
அன்று மாலை 04:30 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.
அதில், மாநிலத்தின் முதன்மாணவிகளுக்கும், காயல்பட்டினலிருந்து 10, 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வுகளை எழுதி பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் IPS சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் B.Sc.,B.Ed., - முன்னிலை வகிக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மா.இராமகிருட்டினன் M.A.,M.Ed.,M.Phil., - சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள உள்ளார்.
தகவல்:
N.S.E. மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர், இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
|