பொன்னன்குறிச்சியிலிருந்து, காயல்பட்டினத்திற்கு தனியாகக் குடிநீர் வினியோகிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இரண்டாவது பைப்லைன் திட்டம் அறிவிக்கப்பட்டு, கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினம் வரையிலான வழித்தடத்தில், பிரதான குழாய் பதிக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுறும் நிலையை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் 28.08.2015 அன்று நடைபெற்றது. காட்சிகள் வருமாறு:-
இரண்டாவது பைப்லைன் திட்டம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[29 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41772
இரண்டாவது பைப்லைன் நிறைவுபெறும் தருவாயில் குழாய்கள் பணியாளர்கள் பதிகிறார்கள் என்னும் செய்தி, 4வது வார்டு சம்பாந்தபட்ட குறுக்கு தெருவில் கிட்டதட்ட தண்ணீர் குழாய்கeள் வந்து இறங்கி 10மாதம் மேல் ஆகிறது இதுவரை பணிகள் துவங்கவில்லையே? செய்தி முன்னுக்கு பின் புறம்பாக இருகிறதே?
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[29 August 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41774
அஸ்ஸலாமு அலைக்கும்
வரவேற்கத்தக்க ஒரு நல்ல செய்தி ......நம் ஊர் மக்கள் அனைவர்களும் நம் ஊருக்கு நல்ல தண்ணீர் '' இரண்டாவது பைப்லைன் திட்டம் மூலம் வரும் நாளை நினைத்து தான் ரொம்பவும் வெகுவாகவே ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருக்கிறார்கள் ...
வாரத்தில் ஒரு நாள் வரும் நல்ல தண்ணீர் எப்போது வரும் என்று கூட தெரியாமல் மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள் ....இதுவும் கூட சரியான நேரத்தில் ,, சரியாகவே வருவது இல்லை ...என்பது குறிபிடத்தக்கது ...
நம் மக்கள் இன்று நல்ல தண்ணீர் வரும் என்று நினைத்து ...அவசரமாக வெளியூர் போக கூடிய பெண் மக்கள் தண்ணீருக்காக தங்கள் வீட்டில் காத்து இருப்பார்கள் ...ஆனால் அன்று நாள் பார்த்து நல்ல தண்ணீரை நம் நகராச்சி நிர்வாகத்தினர்கள் விடமாட்டார்கள். ( வராது ) .....அப்போது நம் மக்களின் மன நிலைபாடு எப்படி இருக்கும் என்று நாம் நினைத்து பார்த்தால் .நமக்கே சங்கடமாகவே இருக்கும் .. A
நம் மக்கள் பல தடவைகள் நகராச்சி அதிகாரிகளிடமும் ,,நம் உறுப்பினர்களிடமும் முறையிட்டு எந்த ஒரு பயனும் இல்லை ...
இன்ஷா அல்லாஹ் ..நம் ஊருக்கு தண்ணீர் பிரச்சனை இந்த '' இரண்டாவது பைப்லைன் திட்டம் மூலம் '' அதிக விரைவில் நிறைவேறி .எந்த ஒரு தடையும் இன்றி நாம் பயன் அடைய வல்ல நாயன் அருள்புரிவானாகவும் ஆமீன் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross