சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் விபரங்களை உள்ளடக்கி, பின்வருமாறு அரசு அறிவிப்பை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிடப்பட்டுள்ளார்:-
கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினைத் தொடர சிரமப்படும் சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த மாணவியருக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவ்லானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களைச் சார்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12000/- கல்வி உதவித் தொகை இரு தவணைகளில் 11ஆம் வகுப்பிற்கு ரூ.6000/-ம் மற்றும் 12ஆம் வகுப்பிற்கு ரூ.6000/- வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகை, கல்விக்கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 1707 சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதிகள்
இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவியர்,
(1) 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நடப்பு 2015-16ஆம் கல்வியாண்டில் - மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ஆம் வகுப்பு பயில்பவராக இருக்கவேண்டும்.
2) குடும்ப ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) 1 இலட்சத்திற்குக் குறைவாக இருத்தல் வேண்டும் (வருமானச்சான்றிதழ், ஓய்வூதியம் ஆணை, ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் உறுதி ஆவணம் (Affidavit) அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். மாணவியர் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை - தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உறுதி ஆவணம் (Affidavit) மற்றும் இதர விவரங்களை www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் 11ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியரிடமிருந்து - பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் - உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப் படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்கள், ஆகியவற்றுடன் அசலாக
The Secretary,
Maulana Azad Education Foundations,
(Ministry of Minority Affiars, Government of India)
Chelms Ford Road,
New Delhi 110055
என்ற முகவரிக்கு 30.09.2015 புதன் மாலை 5.00 மணிக்குள் சேரும் வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும்.
2015-1ஆ6ம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரங்கள் மற்றும் விண்ணப் படிவங்கள், www.maef.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு உதவித்தொகை பெற - அம்மாணவியர் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்களை உடன் மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தொடர்புடைய கல்வி நிலையங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் உரிய காலக்கெடுவிற்குள் சிறுபான்மையின மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |