காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியையொட்டி அமைந்துள்ளது மஹான் வரகவி காஸிம் புலவர் நாயகம் அவர்களின் அடக்கஸ்தலம். இங்கு, ஆண்டுதோறும் மஹான் அவர்களின் நினைவாக கந்தூரி நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு கந்தூரி நிகழ்ச்சிகள், இம்மாதம் 25 முதல் 27ஆம் நாள் - செவ்வாய் முதல் வியாழன் வரை (ஹிஜ்ரீ 1436 துல்கஃதா மாதம் 10 முதல் 12ஆம் நாள் வரை) நடைபெற்றன.
அந்நாட்களில் அன்றாடம் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அன்றாடம் 20.30 மணியளவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
25.08.2015 செவ்வாயன்று, மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.செய்யித் இஸ்மாஈல் அஸ்ஹரீ,
26.08.2015 புதனன்று, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.முஹம்மத் அன்வரீ ஆகியோர் மார்க்க சொற்பொழிவாற்றினர்.
நிறைவு நாளான 27.08.2015 அன்று, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரிதத் தகவல்களையும் உள்ளடக்கி, மார்க்க சொற்பொழிவாற்றினார்.
பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்வனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, கந்தூரி விழாக் குழு தலைவர் குளவி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர், செயலாளர் எம்.எஸ்.ஏ.முஹம்மத் அபூபக்கர், பொருளாளர் சோனா ஷாஹுல் ஹமீத், துணைச் செயலாளர்களான ஏ.பீ.அஹ்மத், எஸ்.எல்.மஹ்மூத், கே.காஸிம், ஐ.ஹமீத், எச்.எம்.முஹ்யித்தீன் ஸாஹிப், கே.எஸ்.முஹம்மத் தாஹா உள்ளிட்டோர் செய்திருந்தனர். |