காயல்பட்டினம் கடற்கரையில் இரு சக்கர வாகனங்கள் தவிர்த்து அனைத்து வாகனங்களுக்கும் நிறுத்தக் கட்டணம் (parking charge) நகராட்சியின் குத்தகை அடிப்படையில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூரிலிருந்து நாற்சக்கர வாகனங்களில் வருவோர், கட்டணம் தர மறுத்து - வசூலிப்பாளருடன் அடிக்கடி வாய்த்தகறாரில் ஈடுபடுவதால் தற்போது நகராட்சியின் சார்பில் பின்வருமாறு அறிவிப்புப் பலகை கடற்கரை நுழைவிடத்தில் நிறுவப்பட்டுள்ளது:-
வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்க குத்தகை எடுத்தவரால் பொறுப்பளித்து நியமிக்கப்பட்டுள்ள கட்டண வசூலிப்பாளர் மது அருந்திய நிலையில் வாகன உரிமையாளர்களிடம் கூடுதலாகப் பேசுவதாலும் அடிக்கடி கடற்கரை நுழைவிடத்தில் தகராறு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இம்மாதம் 24ஆம் நாளன்று மாலையில் அதுபோன்ற நிகழ்வொன்று நடந்தமை குறிப்பிடத்தக்கது.
1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் )[27 August 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41764
இதற்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.
பூங்கா என்று ஒன்றை எங்கு தேடியும் நம் கடற்கரையில் காணக் கிடைக்கவே இல்லை. எங்கு பார்த்தாலும் உடைமரக் காடாகவே இருக்கின்றது.
கடைக்கரை பூராகவும் ஒரே குப்பைக்காடாக கிடந்தது. பல வருடங்கள் பொறுத்து பார்த்தும் நகராட்சி ஒரு அணியையும் புடுங்காததால், காயல் நல மன்றங்கள் சில பொறுப்பு எடுத்து கடற்கரையை சுத்தமாக வைத்துள்ளார்கள்.
கடற்கரைக்கு வரும் மக்களுக்கு உச்சா, கக்கா வந்தால் அவ்வளவு தான். அடித்துப் பிடித்து வீட்டுக்கு ஓடி விட வேண்டியது தான். அதுவே வெளிஊர்க் காரர்களாக இருந்தால் பாவமே.!! அவர்கள் வாழ்வில் காயல் கடற்கரைக்கு வந்த நாள் ஒரு கருப்பு நாட்களாகவே தான் அமையும். எங்கு ஒதுங்குவார்கள். நகராட்சி ஒரு கழிப்பிட வசதியாவது செய்து வைத்து உள்ளதா..?
எந்த ஒரு வசதியும் செய்து வைக்காமல் வண்டி நிறுத்த மட்டும் காசாம்.
கொஞ்சம் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துவிட்டு காசு வாசூலிங்க பாஸ்.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[29 August 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41776
அஸ்ஸலாமு அலைக்கும்
அடிடா சக்கை,,அடிடா .....அழகான ஒரு கடற்கரையை ....எதுவுமே கண்டு கொள்ளாமல் அப்படியே அம்போன்று '' போட்டு விட்டு ...இப்போ என்னடா என்று பார்த்தால் ......வாகனங்களை நிறுத்த வசூலுக்கு மட்டும் விளம்பர பலகையுடன் வந்து விட்டார்கள் நம் நகராச்சிகாரர்கள்....எந்த ஒரு வசதியும் பொது மக்களுக்கு செய்துதராமல் பணத்தை மட்டும் வாங்க வந்தால் யார்தான் சும்மா இருப்பார்கள் ......பிரச்சனை தான் வரும் .....
சண்டை கண்டிப்பாகவே வரத்தான் செய்யும் ,, அதுவும் வாடகை வசூல் பண்ணுபவர் தண்ணி போட்டு கொண்டு வார்த்தையை விட்டால் ,,, நம் ஊர் மக்கள் என்ன ,, வெளியூர் மக்களும் பிரச்சனை பண்ண தான் செய்வார்கள் .....கடற்கரைக்கு உள்ளூர் ,, வெளியூர் பெண்கள் / குழந்தைகளும் ..வயதானவர்கள் என்று குடும்பத்தோடு நிம்மதிக்காக & இயற்கையான காற்றும் வாங்க தான் வருகிறார்கள் ...ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு வசதியும் நம் நகராச்சி செய்து கொடுக்காத போது எப்படி தான் இவர்கள் பணம் கொடுப்பார்கள் ......
ஏதோ நமது ஊரின் ஒரு சில அமைப்பும் & தொண்டு நிர்வனங்களும் மனம் வைத்து .... அப்போ ,, அப்போ ...சுத்தம் செய்தும் ,,நம் கடற்கரையை ஒரு சில மாற்றங்களும் செய்து வருவதால் தான் நம் ஊர் கடற்க்கரை ஓரளவுக்கு பார்க்க நன்றாகவே உள்ளது ...அதான் உள்ளூர் / வெளியூர் மக்களும் வருகிறார்கள் ...
ஒரு அவசர தேவைக்கு பெண்கள் ....படும் சிக்கலை நாம் யாவர்களும் அறிந்து நம் நகராச்சி இடம் பல முறை முறையிட்டும் எந்த ஒரு பலனும் இல்லை ... பொது மக்களின் கடுமையான கோபத்துக்கு தான் நகராச்சினர்கள் ஆளானார்கள் ....
நம் நகராச்சி கொஞ்சம் கவனித்து ..கடற்கரைக்கு வரும் மக்கள் நலனுக்காக நல்லது செய்தால் நல்லது .....பிறகு வாகனத்துக்கு பணம் வசூல் பிரிக்கட்டும் ......தப்பு இல்லை ...
நம் நகராச்சி செய்வார்களா ...,,இல்லை நம் நகராச்சி கவனிக்குமா .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross