காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலை - அதன் வழக்கறிஞர் மூலம் - காயல்பட்டணம்.காம்
இணையதளத்திற்கு, இரு வாரங்களுக்கு முன்பு, நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அந்த நோட்டீசில், ஏப்ரல் 23, 2015 அன்று - DECCAN CHRONICLE நாளிதழ் "793 acres of coastal land in
private hands for 26 years" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தி அவதூறு என்றும், அது குறித்து அந்நாளிதழுக்கு அவதூறு
நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது எனவும், அந்த செய்தியை காயல்பட்டணம்.காம் இணையதளம் மறு பதிவு செய்தது அவதூறு என்றும், அதனால்
காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கும் தற்போது அவதூறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் - அந்த நோட்டீசில், அந்த செய்தியை வெளியிட்டமைக்கு - காயல்பட்டணம்.காம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும், அந்த
செய்தியையும், DCW நிறுவனம் குறித்து இதற்கு முன்பு காயல்பட்டணம்.காம் வெளியிட்டுள்ள அது போன்ற பிற செய்திகளையும் இணையதளத்தில்
இருந்து நீக்க வேண்டும் என்றும், DECCAN CHRONICLE நாளிதழுக்கு, DCW நிறுவனம் அனுப்பிய விளக்கத்தை காயல்பட்டணம்.காம் இணையதளத்தில்
வெளியிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
DCW நிறுவனம் சார்பாக பெறப்பட்ட நோட்டீசுக்கு, காயல்பட்டணம்.காம் தற்போது பதில் அனுப்பியுள்ளது. அந்த பதிலில் -
(1) காயல்பட்டணம்.காம் - காயல்பட்டினம் நகரை சார்ந்த, அப்பகுதி மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய - அனைத்து செய்திகளையும் வெளியிட்டு
வருகிறது
(2) DECCAN CHRONILCE நாளிதழ் செய்தி - ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற நடப்புகள் அடிப்படையிலானவை என்பதால், அந்த செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது
(3) DCW நிறுவனம் குறித்த சுற்றுச்சூழல் மாசு குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக - பல்வேறு தனியார்/அரசு சார்பு அமைப்புகளின் ஆய்வறிக்கைகள்,
அரசு ஆவணங்கள், செய்தி அறிக்கைகள் உள்ளன; அது குறித்து தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் உள்ளது
(4) காயல்பட்டணம்.காம் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்கு வருத்தம் தெரிவிக்க எந்த அவசியமும் இல்லை என்றும், காயல்பட்டணம்.காம்
இணையதளம் இதுவரை வெளியிட்டுள்ள DCW நிறுவனம் குறித்த எந்த செய்தியையும் நீக்க எந்த அவசியமும் இல்லை -
- என்றும், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் வழக்கறிஞர் மூலம் - DCW நிறுவன வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டணம்.காம் இணையதளம் ஏப்ரல் 23, 2015 அன்று வெளியிட்ட DECCAN CHRONICLE செய்திக்கு தற்போது பெறப்பட்டுள்ள DCW
நிறுவனத்தின் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது
|