மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில், 5 மாணவர்கள் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்றுள்ளனர். சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
மாணவர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்வதற்காக, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால், மத்ரஸத்துல் அஸ்ஹர் எனும் பெயரில் திருக்குர்ஆன் மனனப் பிரிவு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மத்ரஸாவின் 15ஆம் ஆண்டு துவக்கவிழா, ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.எம். தீனிய்யாத் 20ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகியன, 09.08.2015 ஞாயிற்றுக்கிழமையன்று, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
அன்று காலையில் - கிராஅத், பேச்சு, துஆ மனனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிஃப்ழுப் பிரிவின் முதல்வரும் - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ, மத்ரஸா குறித்து அறிமுகவுரையாற்றினார்.
திருமறை குர்ஆனை ஓதும் முறைகள் குறித்தும், மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை உள்ளடக்கியும் - பள்ளியின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.
இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் மவ்லவீ ஸாதிக் மிஸ்பாஹீ - இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, மத்ரஸத்துல் அஸ்ஹரில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள 5 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பட்டம் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:-
(1) ஹாஃபிழ் எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ
(த.பெ. பீ.எம்.ஏ.எஸ்.ஷேக் அலீ நுஸ்கீ, குத்துக்கல் தெரு)
(2) ஹாஃபிழ் எஸ்.நூஹ் நுஃபைஸ்
(த.பெ. எஸ்.எச்.ஸுலைமான், குத்துக்கல் தெரு)
(3) ஹாஃபிழ் எஸ்.முஹம்மத் அலீஃப்
(த.பெ. எம்.முஹம்மத் அலீ, கி.மு.கச்சேரி தெரு)
(4) ஹாஃபிழ் எம்.ஏ.கே.நூஹ் ஸப்ரீ
(த.பெ. எம்.என்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், பண்டகசாலைத் தெரு)
(5) ஹாஃபிழ் பி.முஹம்மத் ஹாரிஸ்
(த.பெ. எம்.ஏ.புகாரீ, குறுக்கத் தெரு)
காயல்பட்டினத்தில் இயங்கும் திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் - ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பட்டம் பெற்ற 5 மாணவர்களுக்கும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகையை, அம்மன்றத்தின் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, காலையில் நடைபெற்ற சன்மார்க்க பல்சுவைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளால் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளி செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளையும், சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் மேலாளர் டீ.வி.எஸ்.ஜக்கரிய்யா நெறிப்படுத்தினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் மற்றும் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
படங்கள்:
Y.M.முஹம்மத் ஸாலிஹ் (மக்கா)
தகவல் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
மத்ரஸத்துல் அஸ்ஹரில் கடந்த ஆண்டு (2014) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |