காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில், முஸ்லிமல்லாத மக்களுக்காக, “சகோதரத்துவ சங்கமம் - 2015” எனும் தலைப்பில், 09.08.2015 அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
சகோதாரத்துவ சங்கமம் - 2015
நமது தவா செண்டர் சார்பாக கடந்த 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை சகோதாரத்துவ சங்கமம் - 2015 என்ற பெயரில் பல் சமய மக்களுடன் ஓர் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில், 09.08.2015 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி நமது காயல்பட்டினத்தை சுற்றி இருக்கும் பல்சமய சகோதர, சகோதரிகள் இஸ்லாத்தை பற்றி அறிந்திடவும் தவறான எண்ணங்களிலிருந்து நல்ல முறையில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு, ஓர்தாய் பிள்ளைகளாக வாழ்ந்திடும் வண்ணம் நமது தவா செண்டர் சமூக நல்லிணக்க மையம் சார்பாக நடத்தப்பட்டது.
இந்த சங்கமத்தில் ஒன்று கூட தொழில் அதிபர்கள், வக்கீல், ஆசிரியர்கள், வேலை செய்பவர்கள், இளைஞர்கள் என இன்னும் ஏராளமான பலரும் ஒன்று கூடி இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் .
நிகழ்ச்சி காலை 10.00 மனியளவில் துவங்கப்பட்டது. முதலாவதாக தலைமை உரையை கலாமி ஹாஜியார் நிகழ்த்தினார். " பன்முக சமூகத்தாருடன் நபிகள் நாயகம் (ஸல்)" அவர்கள் என்ற தலைப்பில் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி முதல்வர் மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார். "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில், மவ்லவீ எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ உரையாற்றினார்.
இஸ்லாமைப் பற்றிய கேள்விகளுக்கு சென்னையைச் சார்ந்த ஜக்கரிய்யா பதில் அளித்தார். இதில் பல்சமய ஆண்களும் பெண்களும் தங்களின் மனதிலிருந்த - இஸ்லாம் பற்றிய கேள்விகளை நேரடியாகவும் எழுத்து வடிவிலும் கேட்டு விளக்கம் பெற்றனர்.
சகோதாரத்துவ சங்கமத்தின் இறுதி நிகழ்வாக வந்திருந்த சகோதர, சகோதரிகள் இந்நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடத்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.
மேலும் சிறப்பான கேள்வியை கேட்ட சகோதர, சகோதரிகள் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. எம்.எஸ்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
வந்திருந்த சகோதர, சகோதரிகளுக்கு விருந்து ஏற்பாட்டுடன், இஸ்லாமை அறிமுகப்படுத்தும் பல்வேறு தலைப்புகளிலான நூல்களும், திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகளும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்களுள் உதவி:
Y.M.முஹம்மத் ஸாலிஹ் (மக்கா)
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |