தூத்துக்குடி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுக்க நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி இன்று 15.30 மணியளவில் நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய இப்பேரணியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் உறுதிமொழியை முன்மொழிய, பேரணியில் பங்கேற்ற சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் அதனை வழிமொழிந்தனர். தொடர்ந்து, நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் பேரணியைத் துவக்கி வைத்தார்.
நகர்மன்ற 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி, துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி, அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நகராட்சியின் ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |