தூத்துக்குடி ஹோலி க்ராஸ் மேனிலைப்பள்ளியின் சார்பில் CROSA - 2015 எனும் தலைப்பில் பல்வேறு போட்டிகள், இம்மாதம் 20, 21 நாட்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியர், பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர். விபரப் பட்டியல் வருமாறு:-
சீனியர் பிரிவிற்கான போட்டிகளில் இப்பள்ளி, இரண்டாமிடம் பெற்று, Runner-Up கேடயத்தைப் பெற்றுள்ளது.
அதுபோல, கடந்தாண்டு நடைபெற்ற FIITJEE அறிவியல் திறனாய்வுத் தேர்வில் 236 மாணவ-மாணவியர் பங்கேற்றிருந்தனர். அவர்களுள் 5 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த ஐவருள், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்,
கே.ஃபரீதா (09ஆம் வகுப்பு),
எஸ்.ஐ.கதீஜா (08ஆம் வகுப்பு),
எஸ்.எச்.சாமு ரய்ஃபா (11ஆம் வகுப்பு)
ஆகிய 3 மாணவியர் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று, Runner-Up கேடயத்தைப் பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற பள்ளி மாணவியரை, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |