காயல்பட்டினம் தைக்கா தெருவிலுள்ள மஹான் ஸாஹிப் அப்பா தைக்காவில் அடங்கியிருக்கும் - அன்னாரின் தந்தை மஹான் உமர் வலிய்யுல்லாஹ் அவர்களின் 219ஆம் ஆண்டு கந்தூரி விழா 29.08.2015 சனிக்கிழமை நடைபெற்றது.
துல்கஃதா மாதம் பிறை 01 அன்று கொடியேற்றப்பட்டது. பிறை 01 முதல் 13 வரை அன்றாடம் பஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது.
பிறை 12, காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், பிறை 13 (09.09.2014) அஸ்ர் தொழுகைக்குப் பின்பும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திப் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் (டன்லப் பள்ளி) இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ - மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களை உள்ளடக்கி சன்மார்க்க சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்வில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கந்தூரியை முன்னிட்டு முன்னதாக ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் ஏற்றப்பட்ட யானை, பல்லக்குகள் அடங்கிய இந்த ஊர்வலம் தஃப்ஸ் முழங்க, நகரின் முக்கிய தெருக்களின் வழியாக தைக்கா வளாகத்திற்குள் சென்றது. ஊர்வல ஏற்பாடுகளை காயல்பட்டினம் முஹ்யித்தீன் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹாஃபிழ் நஹ்வீ A.M.ஈஸா ஜக்கரிய்யா
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435இல்) நடைபெற்ற - மஹான் உமர் வலிய்யுல்லாஹ் கந்தூரி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[ஒரு படம் திருத்தப்பட்டது @ 05:48 / 31.08.2015] |