காயல்பட்டினம் நகரின் சுகாதாரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, SDPI கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு, நேற்று (ஆகஸ்ட் 31; திங்கள்) நடந்த மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இது குறித்து அக்கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:
SDPI சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காயல்பட்டணம் நகரின் சுகாதாரம், அடிப்படை வசதி - மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 31/8/15 திங்கள் அன்று மனு சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் உறுதியாகக் கூறினார்.
SDPI கட்சியின் நகர மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியரை சந்திக்க பொது மக்களுடன் சென்றிருந்தனர்.
இவ்வாறு SDPI கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்
H. சம்சுத்தீன்,
மாவட்ட பொது செயலாளர்,
SDPI, தூத்துக்குடி மாவட்டம். |