தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் “ஏணி” சின்னத்தில் போட்டியிடுகிறார்.
காயல்பட்டினத்தில் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளையும், நகரப் பிரமுகர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், அவரவருக்கு அறிமுகமான கடையநல்லூர்வாசிகளிடம் ஆதரவைத் திரட்டித் தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் அவர்கள் நடைபெறவுள்ள 2016-ம் சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் தி மு க கூட்டணி வேட்பாளராக ஏணி சின்னத்தில் களம் காண்கிறார்.
தேர்தல் பணிகளுக்கிடையே சென்ற 23-04-2016 சனிக்கிழமை காலை சொந்த ஊரான காயல்பட்டணத்திற்கு வருகைத்தந்த அவர், காயல்பட்டணம் திருச்செந்தூர் சாலை அமைந்துள்ள மஹான் ஷஹீத் முத்து மொகுதூம்வலிய்யுல்லாஹ், தைக்கா தெருவில் அமைந்துள்ள மஹான் தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் ஆகிய தர்காக்களி சிறப்பு பிராத்தனை செய்தார்.
பின்னர் மகழரா அரபி கல்லூரி, ஜாவிய அரபிக் கல்லூரி, மஸ்ஜித் மிக்காயில் பள்ளி & ஜெலாலியா நிக்காஹ் மஜ்லிஸ்,புஹாரி சரிப் சபை, அல் ஜாமியுல் அஸ்கர் பள்ளி ஆகிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து முக்கய பிரமுகர்களான காயல்பட்டணம் ஐக்கிய பேரவை துணைத்தலைவர் அல்ஹாஜி எஸ்.எம்.ஃபாஸி, அல்ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான், அல்ஹாஜி கப்பார், அல்ஹாஜி அக்பர்சா, அல்ஹாஜி ஜெஸ்மின் கலீல் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இருதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காயல்பட்டணம் கிளை அலுவலகமான தியாகி பி.எஸ்.எம்.அப்துல் காதர் மன்ஸில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் காயல்பட்டணம் நகர நிர்வாகிகளால் தக்பீர் முழக்கத்துடன் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூது ஹசன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்காப், துணை செயலாளர் பெத்தப்பா எம்.ஏ.சுல்தான் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.ஏ.சுஹைல் இப்ராஹிம், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சேக்முகம்மது, நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ், பொருளார் எம்.எம்.முஹம்மது ஹசன் மற்றும் மூன்றவது வார்டு மாவட்ட பிரதிநிதி எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா), மூன்றவது வார்டு மாவட்ட பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், ஆறாவது வார்டுத் தலைவர் ஏ.கே.மஹ்மூது சுலைமான், இரண்டாவது வார்டுத் தலைவர் பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், இரண்டாவது வார்டு செயலாளர் எம்.ஜெட்.சித்தீக் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |