தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், பொதுமக்களை நூறு சதவிகிதம் வாக்களிக்கச் செய்யத் தூண்டும் வகையில், தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், இன்று ஜும்ஆ தொழுகையை முடித்து வீடு திரும்பிய பொதுமக்களுக்கு, திருச்செந்தூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அழகம்மை வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசுரங்களை வினியோகித்தார்.
அவருடன் இணைந்து, ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்ஸிஸ் பாரதி, அதன் துணை அலுவலர்களான முனியசாமி, கந்தசாமி ஆகியோரும் பிரசுரங்களை வினியோகித்தனர்.
|