| |
செய்தி எண் (ID #) 17649 | | | சனி, ஏப்ரல் 30, 2016 | புகாரி ஷரீஃப் 1437: 21ஆம் நாள் நிகழ்வுகள்! அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2066 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.04.2016. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 29 அன்று 21ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் - ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் தலைவர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் அலீ பாக்கவீ ஆகியோர் நிகழ்த்தினர்.
ரஜப் 22ஆம் நாள் (ஏப்ரல் 30) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி & ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ ஆகியோர் வழங்கவுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 21ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1437ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|