மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) மார்க்கப் பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக, நகரிலுள்ள ஏழை-எளிய குடும்பத்தினருக்கு - நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஃபித்ரா உணவுப் பொருட்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டுள்ளன.
நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 ஏழைக் குடும்பத்தினருக்கு, 13 ஆயிரத்து 175 ரூபாய் மதிப்பில் மேற்படி பொருட்கள், அமைப்பின் மாவட்ட - நகர நிர்வாகிகள் முன்னிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஃபைஸல் வினியோகித்து துவக்கி வைக்க, அமைப்பினர் தொடர்ந்து வினியோகித்தனர்.
தகவல் & படங்கள்:
ஷாஹுல் ஹமீத்
|