இளநிலை பட்டப் படிப்புகளுக்கு - பல்வேறு கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான விபரங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
மே 16 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற துவங்கியுள்ளன.
ஏறத்தாழ அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 தினங்கள் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளன.
அந்த வரிசையில், கீழக்கரை தாஸிம் பீவி (Thassim Beevi Abdul Kader College for Women) என்னென்ன இளநிலை படிப்புகள் உள்ளன என்ற விபரமும், விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்திலும் வழங்கப்படுகிறது.
http://registration.mastersofterp.in/CollegeHome.aspx
கல்லூரியின் இணையதளம்:
http://thassim.in
இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி தினம்: ஆகஸ்ட் 18, 2018
1988 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரியில், மாணவியர் தங்கும் விடுதியும் சேர்ந்துள்ளது.
கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் சலுகையும் வழங்கப்படுகிறது. (விபரம் இணைக்கப்பட்டுள்ளது)
கல்லூரியில் பயில கட்டணம் விபரம் தனியாக இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 20, 2018; 1:00 pm]
[#NEPR/2018052004]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|