இளநிலை பட்டப் படிப்புகளுக்கு - பல்வேறு கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான விபரங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
மே 16 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற துவங்கியுள்ளன.
ஏறத்தாழ அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 தினங்கள் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளன.
மேலும் - பல கல்லூரிகள், இணையவழியில் மட்டுமே, விண்ணப்பங்களை பெறுகின்றன.
அந்த வரிசையில், சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹமது செய்யத் (Justice Basheer Ahamed Seyed College for Women/SIET) என்னென்ன இளநிலை படிப்புகள் உள்ளன என்ற விபரமும், விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.
http://185.62.37.234/jbasonline/
குறிப்பு:
// நீங்கள் சேர விரும்பும் ஒவ்வொரு இளநிலை படிப்புக்கும், தனித்தனியாக இணையதளத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும்
// விண்ணப்பம் கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்தவேண்டும்
கல்லூரியின் இணையதளம்:
http://www.jbascollege.edu.in
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இருந்து தினம்: மே 26, 2018
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 19, 2018; 6:00 pm]
[#NEPR/2018051905]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|