இளநிலை பட்டப் படிப்புகளுக்கு - பல்வேறு கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான விபரங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
மே 16 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற துவங்கியுள்ளன.
ஏறத்தாழ அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 தினங்கள் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளன.
அந்த வரிசையில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் (Jamal Mohamed College, Trichy) என்னென்ன இளநிலை படிப்புகள் உள்ளன என்ற விபரமும், எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்ற விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வழிமுறை இல்லை. விண்ணப்பங்களை - கல்லூரியின் கீழ்க்காணும் அலுவலகத்தில் பெறலாம்.:
Jamal Mohamed College,
7,Race Course Road,
Khajanagar,
Tiruchirapalli- 620 020.
அல்லது
இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, கல்லூரியின் முகவரிக்கு அனுப்பலாம்.
விண்ணப்பத்துடன் -
--- பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நகல்
--- ஜாதி சான்றிதழ் நகல்
--- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இணைத்து அனுப்பவேண்டும்.
அரசு உதவி பெரும் படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம்
--- நேரடியாக விண்ணப்பம் அனுப்பினால் = Rs.50
--- தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பினால் = Rs.80
சுயஉதவி பிரிவு படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம்
--- நேரடியாக விண்ணப்பம் அனுப்பினால் = Rs.100
--- தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பினால் = Rs.130
விண்ணப்ப கட்டணத்தை - வரைவு காசோலையாக (in favour of Principal, Jamal Mohamed College, payable at Tiruchirapalli) இணைத்து - விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும்.
1951 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி, தேசிய தரவரிசை பட்டியலில் (NIRF) 83வது இடத்தில உள்ளது.
கல்லூரியின் இணையதளம்:
http://www.jmc.edu
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி தினம்: மே 26, 2018
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 19, 2018; 9:30 am]
[#NEPR/2018051902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|