இளநிலை பட்டப் படிப்புகளுக்கு - பல்வேறு கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான விபரங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
மே 16 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற துவங்கியுள்ளன.
ஏறத்தாழ அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 தினங்கள் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளன.
அந்த வரிசையில், சென்னை மாநில கல்லூரியில் (PRESIDENCY COLLEGE) என்னென்ன இளநிலை படிப்புகள் உள்ளன என்ற விபரமும், எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்ற விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநில கல்லூரி (PRESIDENCY COLLEGE) - 1840 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, தமிழக அரசினால் நடத்தப்படும் கல்லூரியாகும். சென்னை காமராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த கல்லூரி, அகில இந்தியா தரவரிசை பட்டியலில் (NIRF) ஐந்தாவது இடத்தில உள்ளது.
இக்கல்லூரியில் 21 இளங்கலை பட்டப்படிப்புகள் (UNDERGRADUATE COURSES) உள்ளன; அனைத்து பிரிவுகளிலும் பயில, மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
எத்தனை இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்தாலும், ஒரே விண்ணப்பம் மூலம் செய்யலாம்.
விண்ணப்பபடிவம் கல்லூரியில் மே முதல் வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படுகிறது. மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில் நடைபெறும் (SINGLE WINDOW COUNSELLING).
சமுதாயப்பிரிவுகள் வாரியாக இக்கல்லூரியில் இட ஒதுக்கீடு கையாளப்படுகிறது. (COMMUNITY BASED RESERVATION)
கல்லூரியின் இணையதளம்:
http://www.presidencychennai.com
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள்: மே 26, 2018
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 18, 2018; 6:00 pm]
[#NEPR/2018051804]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |