காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த எம்.எச்.மொகுதூம் கண்டு ஸாஹிப் நாகூர் பிச்சை என்பவர், ஆந்திர மாநிலம் வரங்கல் நகரில், நேற்று (மே 17 வியாழக்கிழமை) 03.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
ம.கு.முஹம்மத் ஹஸன் என்பவரது மூத்த மகனும்,
மர்ஹூம் ம.கு.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
எம்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆரிஃப், எம்.எச்.அப்துல் வாஹித், எம்.எச்.ஷாஹுல் ஹமீத் பாதுஷா, எம்.எச்.செய்யித் உமர் ஃபாரூக், எம்.எச்.ஸதக்கத்துல்லாஹ், எம்.எச்.ஜவாஹிர், எம்.எச்.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரரும்,
எம்.கே.எஸ்.முஹம்மத் ஹரீஸ் என்பவரது தந்தையும்,
எஸ்.எஃப்.ஸாஹிப் ஸர்ஜூன் என்பவரது மாமனாரும்,
கான்பூரார் முஹம்மத் அப்துல் காதிர் என்பவரது மருமகனும்,
எம்.ஏ.கே.மொகுதூம் கண்டு ஸாஹிப், எம்.ஏ.கே.ஷேக்னா லெப்பை ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று காலையில், ஆந்திர மாநிலம் வரங்கல் நகரிலுள்ள பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:
S.A.K.முஹம்மத் உமர் (உமரய்யா)
|