மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை - (MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT) கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தரவரிசை பட்டியல் (National Institutional Ranking Framework; NIRF) வெளியிட்டு வருகிறது.
இதுகுறித்த விளக்கங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
பல மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியை நிறைவு செய்து, கல்லூரி வாழ்க்கையை துவங்கும் காலம் இது. என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விகளும் நிறைந்த காலம் இது.
கல்லூரிகளை தேர்வு செய்ய பல வழிமுறைகளை - மாணவர்களும், பெற்றோர்களும் பின்பற்றுவர். நண்பர்களின் வாய்மொழி பரிந்துரைகள், உறவினர்களின் வாய்மொழி பரிந்துரைகள் இதில் பெரும் பங்கு வகிக்கும். சில தனியார் ஊடகங்களும், சிறந்த கல்லூரி என்னென்ன என்ற தரவரிசை பட்டியலையும், சில ஆய்வுகள் அடிப்படையில், அவ்வப்போது வெளியிடும். இவற்றையும், பலர் - வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்வார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை - (MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT) கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தரவரிசை பட்டியல் (National Institutional Ranking Framework; NIRF) வெளியிட்டு வருகிறது.
2018 ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
ஒரு மாணவர், தான் பயில விரும்பும் கல்லூரியை தேர்வு செய்ய - இந்த தரவரிசை பட்டியல் மட்டும் போதும் என்று கண்டிப்பாக கூற இயலாது. இருப்பினும், (எந்த கல்லூரியில் சேரலாம் என தேடலில் இருக்கும் பெற்றோருக்கும்/மாணவர்களுக்கும் - இந்த தரவரிசை பட்டியல், கூடுதல் உதவியாக இருக்கும்* என்ற அடிப்படையில், இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக கல்லூரிகள் விபரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் - சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வழங்கப்படுகிறது. கல்லூரியின் பெயருக்கு பிறகு - இறுதியாக, அடைப்புக்குறிக்குள் உள்ள எண் - அந்த கல்லூரியின் அகில இந்தியா தரவரிசை ஆகும்)
(1) Indian Institute of Technology Madras (#1)
(2) Anna University (#8)
(3) National Institute of Technology Tiruchirappalli (#11)
(4) Vellore Institute of Technology (#16)
(5) PSG College of Technology, Coimbatore (#29)
(6) Shanmugha Arts Science Technology & Research Academy, Thanjavur (#33)
(7) Sri Sivasubramaniya Nadar College of Engineering, Kancheepuram (#36)
(8) Sathyabama Institute of Science and Technology, Chennai (#37)
(9) Thiagarajar College of Engineering, Madurai (#39)
(10) SRM Institute of Science and Technology, Chennai (#46)
(11) Coimbatore Institute of Technology (#62)
(12) Kongu Engineering College, Perundurai (#68)
(13) Karunya Institute of Technology and Sciences, Coimbatore (#72)
(14) Bannari Amman Institute of Technology, Sathyamangalam (#76)
(15) Vel Tech Rangarajan Dr.Sagunthala R & D Institute of Science and Technology, Chennai (#77)
(16) B.S. Abdur Rahman Institute of Science and Technology, Chennai (#79)
(17) Kumaraguru College of Technology, Coimbatore (#82)
(18) Government College of Technology, Coimbatore (#93)
(19) Kalasalingam Academy of Research and Higher Education, Srivilliputhur (#96)
நாட்டின் அனைத்து பொறியியல் கல்லூரிகள் அடங்கிய பட்டியலை காண இந்த இணையதள முகவரியை பயன்படுத்தவும்:
https://www.nirfindia.org/2018/EngineeringRanking.html
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 18, 2018; 10:30 am]
[#NEPR/2018051801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|