மே 16ஆம் நாள் தேசிய டெங்கு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, காயல்பட்டினம் நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்மா உணவக வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று 15.30 மணிக்கு நடத்தப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் தங்கப்பாண்டி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ப்ரேம் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர் - டெங்கு பரவும் விதம், அதன் பரவலைத் தடுத்திடச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினர். மதர் ட்ரஸ்ட் இயக்குநர் கென்னடி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இதில், காயல்பட்டினம் நகரில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் பருகக் கொடுக்கப்பட்டது.
|