நிகழும் 2018-19 கல்வியாண்டிற்கான – காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து இக்ராஃ கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், கலை-அறிவியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன்,ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு சாரா (தனியார்) அமைப்புகளில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் வழிகாட்டப்படுகின்றன.
அந்த அடிப்படையில் நடப்பு (2018-19) கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக, இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில் வழமை போல் பிரசுரம் வெளியிடப்பட்டு, நகரின் அனைத்து பள்ளிவாசல்கள், பொது நல அமைப்புகளுக்கு அனுப்பப்பபடுகிறது. அத்துடன் எதிர் வரும் வெள்ளியன்று அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்பபடவுள்ளது.
இக்ராஃ வெளியிட்டுள்ள பிரசுரம் வருமாறு:-
இதனைக் காண்போர் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த, நடப்பாண்டு கல்லூரிக்கு செல்லவிருக்கும் காயல் நகர மாணவ- மாணவியருக்கு இந்த தகவலை எத்தி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
A.தர்வேஷ் முஹம்மத்
(நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம்)
|