காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், 15.05.2018. செவ்வாய்க்கிழமை) 09.00 மணி முதல் 17.00 மணி வரை - மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் (வினியோகம்) வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டினம் & திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் 15.05.2018 செவ்வாய்க்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,
புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தலைவாய்புரம், திருச்செந்தூர்; சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமாங்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களில் அன்று 09:00 மணி முதல் 17:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|