விளையாட்டுப் போட்டிகளில் வென்று பரிசு பெற்றோர், பங்கேற்றோருக்கென பொறியியல் சேர்க்கையில் 500 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அரசின் தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - மே 3 அன்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இன்று (மே 11) மாலை வரை, 45,608 மாணவர்கள், இணையவழியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
இந்த கலந்தாய்வுகளில் - 500 இடங்கள், சர்வேதேச, தேசிய, மாநில, மண்டல, மாவட்ட அளவிலான 56 விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் வென்றவர்கள் / பங்கேற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். (EMINENT SPORTS PERSONS QUOTA)
12 இடங்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துறைகளிலும், மீதி 488 இடங்கள் இதர பொறியியல் கல்லூரிகளிலும் ஒதுக்கப்படும்.
எந்தெந்த போட்டிகள் அங்கீகரிக்கப்பட்டவை, ஒவ்வொரு போட்டிக்கும் எவ்வளவு மதிப்பெண்கள் என்ற விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 11, 2018; 10:00 pm]
[#NEPR/2018051103]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|