இலவச கட்டாயக் கல்வி தொடர்பான தகவல்களை உள்ளடக்கி – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் [மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD)] நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார், மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்கீழ், CBSE/ICSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவீத இடம் ஒதுக்கப்படவேண்டும்.
இந்த சட்டம் சம்பந்தமாக பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை, கடந்த சில வாரங்களாக நடப்பது என்ன? குழுமம் நகரில் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக - இது சம்பந்தமாக அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள், நகரின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும், கடந்த வெள்ளியன்று விநியோகம் செய்யப்பட்டது. மேலும் - கடற்கரை உட்பட நகரின் முக்கிய பகுதிகளிலும், இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இன்று - நகரின் புறநகர் பகுதிகளில், இந்த துண்டு பிரசுரம், நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் விநியோகம் செய்யப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 13, 2018; 6:30 pm]
[#NEPR/2018051301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|