காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியில் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்ற - ரமழான் தலைப்பிறை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில்,
தமிழகமெங்கும் ரமழான் தலைப்பிறை பரவலாகக் காணப்பட்டு, உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் - இன்று ரமழான் முதல் இரவு என்றும், நாளை (17.05.2018. வியாழக்கிழமை) ரமழான் முதல் நோன்பு என்றும் அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவரும் - காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி ஆகியவற்றின் உலமாக்களும், நகர உலமாக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 09:25 / 17.05.2018.] |