சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், வரும் ஜூன் மாதம் 01ஆம் நாளன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்படவுள்ளதாக அதன் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 66-வது செயற்குழு கூட்டம் கடந்த 11.05.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சகோதரர் முஹம்மது நூஹு அவர்கள் இல்லத்தில் சகோதரர் தாவூத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் செய்யத் ஷஃபீயுல்லாஹ் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் அப்துர் ரஹ்மான் அவர்கள் இறைமறை ஓதிக் கூட்டத்தை துவக்கி வைக்க, அதனைத் தொடர்ந்து சகோதரர் S.L. சதக்கத்துல்லாஹ் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
தலைமையுரை ஆற்றிய சகோதரர் தாவூத் இத்ரீஸ், மன்ற செயல்பாடுகள் அதீத வளர்ச்சி அடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார் மேலும் அரபு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை, எமது செயல்பாடுகளில் எந்தவித வீழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடாது என்றும், நமது இந்த சீரிய செயல்பாடுகளைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை பொருளாளர் சகோதரர் M.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி அவர்கள் வாசித்தார்.
இக்ராஃ:
எமது மன்றத்தின் சார்பாக மன்ற தலைவர் சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை அவர்கள் இக்ராஃ கல்விச்சங்கத்தின் துணைத் தலைவராக செயற்குழு உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் கடந்த ஆறு வருடங்களாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நடப்பு ஆண்டிற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் மற்றும் சகோதரர் இர்ஷாத் ஆகியோர் நகரில் உணவுப் பொருட்கள் வழங்க மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளைப் பற்றி விளக்கமளித்தனர். இத்திட்டத்தினை மேன்படுத்த சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் மற்றும் சகோதரர் இர்ஷாத் ஆகியோர் வழங்கிய கருத்துகளை வரும் காலங்களில் கருத்தில்கொள்ளபடும் என்றும் இதற்காக தமது பங்களிப்பை ஆற்றிய இவ்விருவருக்கும் எமது மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
56-வது பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் 56-வது பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) வழமைபோல் இஃப்தார் நிகழ்ச்சியோடு நடத்தச் செயற்குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டு, பத்ஹா ஷிபா அல்-ஜெஸீரா பார்ட்டி ஹாலில் நடத்த ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. பொதுக்குழு சம்பந்தமான மேலும் விபரங்கள் விரைவில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் வாட்சப் மூலம் தெரிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
சகோதரர் முஹம்மது நூஹு, சகோதரர் ஜைத் மிஸ்கீன், சகோதரர் சதக் சமில், மற்றும் சகோதரர் தைக்கா சாஹிப் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த சகோதரர் முஹம்மது நூஹு அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.
இறுதியாக சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில சகோதரர் PSJ ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA.
|