பொறியியல் சேர்க்கையின் அடுத்தடுத்த நடைமுறைகளை விளக்கி காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள கால அட்டவணை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - மே 3 அன்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இது சம்பந்தமான அறிவிப்பு ஏப்ரல் 29 அன்று வெளிவந்தது.
நேற்று (மே 11) மாலை வரை, 45,608 மாணவர்கள், இணையவழியில் (www.annauniv.edu/tnea2018 | www.tnea.ac.in) தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
// ஜூன் முதல் வாரம், விண்ணப்பம் செய்த ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்தியேக ரேண்டம் எண் (RANDOM NUMBER) ஒதுக்கப்படும்.
// மேலும் இதே காலகட்டத்தில், விண்ணப்பம் செய்துள்ள அனைத்து மாணவர்களின் ஆவணங்களை சரிப்பார்க்க தேதி அறிவிக்கப்படும்.
// அவ்வேளையில், அருகாமையில் உள்ள மையத்திற்கு (TNEA VERIFICATION CENTRE) சென்று மாணவர்கள் ஆவணங்களை சரிப்பார்க்கவேண்டும். அப்போது - மாணவர்களிடம், கல்லூரிகள் விபரங்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்படும்.
// அதனை தொடர்ந்து, கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் (RANK LIST) வெளியிடப்படும். இந்த பட்டியல் அடிப்படையில் தான் கலந்தாய்வு நடைபெறும்.
ஒரே மதிப்பெண்ணில் பல மாணவர் இருப்பின், அந்த மாணவர்களில்
----- கணக்கு பாடத்தில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்; அடுத்து -
----- இயற்பியல் (PHYSICS) பாடத்தில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்; அடுத்து -
----- நான்காவது பாடத்தில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்; அடுத்து -
----- வயதில் மூத்தவர்; அடுத்து -
----- ரேண்டம் எண்ணில் மதிப்பில் பெரிய எண் பெற்றவர்
--- என்ற அடிப்படையில், தரவரிசை பட்டியல் (MERIT LIST) முடிவு செய்யப்படும்.
// ஜூலை முதல் வாரத்தில், மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் (ONLINE COUNSELLING) நடைபெறும்.
// இச்சமயத்தில், மாணவர்கள் தொடர்ச்சியாக - தினசரி காலியிடங்கள் விபரங்களை கண்காணித்து வந்து, தங்களுக்கான வாய்ப்பு வரும் போது, தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
// இதன் பிறகு - மாணவர்களுக்கு, ஈமெயில் மூலமாக, கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதம் (ALLOTMENT LETTER) அனுப்பப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 12, 2018; 3:30 pm]
[#NEPR/2018051202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|