காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மருந்துறைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் மருத்துவர் தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை - அன்றாடம் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மருத்துவமனையில், பல்வேறு மருத்துவ சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, இம்மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மருந்தகத்தில் - 200க்கும் மேற்பட்ட மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படவும், மருத்துவர் காலியிடங்களை நிரப்பிடவும், கூடுதலாக நிபுணர் மருத்துவர்களை நியமனம் செய்யக்கோரியும், பழுதடைந்துள்ள கட்டுமானங்களை புனரமைக்க கோரியும், மேலும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திட கோரியும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டும், இன்னும் பல்வேறு பணிகளும் நடப்பது என்ன? குழுமம் சார்பாக மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
அந்த வரிசையில் - அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் மருந்துகளை பாதுகாப்பாக நோயாளிகளிடம் வழங்கிட தோதுவாக, காகித உறைகள் - நடப்பது என்ன? குழும அனுசரணையில் அச்சிடப்பட்டு, இன்று தலைமை மருத்துவர் டாக்டர் ராணி டப்ஸ் அவர்களிடம், நிர்வாகிகளால் ஒப்படைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 11, 2018; 2:30 pm]
[#NEPR/2018051102]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|