பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு POST MATRIC SCHOLARSHIP திட்டம் குறித்த அரசின் தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - மே 3 அன்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
நேற்று (மே 10) மாலை வரை, 41,182 மாணவர்கள், இணையவழியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
குடும்பத்தில் முதல் பட்டதாரி (FIRST GRADUATE IN THE FAMILY) மற்றும் AICTE அமைப்பு அறிவித்துள்ள மொத்த இடங்களில் ஐந்து சதவாதம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் கல்விக்கட்டணம் தள்ளுபடி (AICTE TFW) என்ற இரு திட்டங்களை தவிர, ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் (SC/SCA/ST) ஆகியோருக்கு என பிரத்தியேக சலுகை திட்டமும் உள்ளது.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழும், அது போல - கிருஸ்துவ மதத்தை தழுவிய ஆதிதிராவிடர், அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்த பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு கீழும் இருந்தால் - அவர்களின் குழந்தைகளுக்கு, பொறியியல் கல்லூரிகளில் பயில Post Matric Scholarship வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதுள்ளது.
இணையவழியில் விண்ணப்பம் செய்யும் போது - இந்த பிரிவுகளுக்குள் வரும் மாணவர்கள், இந்த திட்டம் மூலம் சலுகை பெற விருப்பம் தெரிவித்து, அதற்கான தேர்வினை செய்யவேண்டும்.
இந்த திட்டம் சம்பந்தமாக - தமிழக அரசு, மூன்று அரசாணைகள் வெளியிட்டுள்ளது.
(1) G.O. (st) No. 6 Adi Dravidar and Tribal Welfare (AD3) Department dated 09.01.2012
(2) G.O. (st) No. 92 Adi Dravidar and Tribal Welfare (AD3) Department dated 11.09.2012
(3) G.O. (st) No. 16 Adi Dravidar and Tribal Welfare (AD3) Department dated 24.02.2014
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 11, 2018; 10:00 am]
[#NEPR/2018051101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|