2018ஆம் ஆண்டின் - ARR கோப்பைக்கான வி யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில், Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது. இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 1ஆம் தேதி மாலை நடைபெற்றது.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இறுதிப் போட்டியில் Yousuf United அணியும் Diamond Spark அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Diamond Spark அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ARR கோப்பையை தட்டிச்சென்றனர்.
அதனையடுத்து நடைபெற்ற ஜுனியர் பிரிவின் இறுதிப் போட்டியில் Knight Riders அணியும், Smile Soccers அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Smile Soccers அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ARR கோப்பையை தட்டிச்சென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆறுமுகனேரி காவல் துறை ஆய்வாளர் திரு. சம்பத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வின் துவக்கமாக ஹாஃபிழ் B. ஹிஸாம் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை ஜஹாங்கிர் வழங்கினார். நிகழ்வின் தொடராக சிறப்பு விருந்தினர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து நடுவர்கள் இஸ்மாயீல், ஜமால், போட்டி ஒருங்கினைப்பாளர் ஆசிரியர் மீரா தம்பி ஆகியோர்களுக்கும், வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்குமுனைந்த சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு அணி வீரர்களுக்கும் தனிநபர் பரிசுகள் மற்றும் அணிக்கான கோப்பை, காசோலை வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை சிறப்பு விருந்தினர் திரு. சம்பத் அவர்கள், ஜனாப். L.K.K. லெப்பைத் தம்பி அவர்கள், ஜனாப். அமீன் அப்பா அவர்கள் மற்றும் போட்டியின் ஒருங்கினைப்பாளர் சகோ. ஆசிரியர் மீராதம்பி ஆகியோர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரைக்குப்பின் தேசியகீதத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டிக்கான ஏற்பாடுகளை வீ-யூனைடெட் குழுமத்தின் ஆலோசனையின் கீழ், அலி ஃபைஸல், ஆசிரியர் மீராதம்பி, ஆசிரியர் இஸ்மாயில் மற்றும் ஜஹாங்கிர் உள்ளிட்டோர் செய்திருந்தார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
|