இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பீ. பட்டினம் ஜாமிஆ அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து தேர்ச்சி பெற்று, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது – பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார். அவருக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பீ. பட்டினத்தில் இயங்கி வருகிறது ஜாமிஆ அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரி. இதன் பட்டமளிப்பு விழா 06.05.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணிக்கு, கல்லூரியின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையைச் சேர்ந்த ஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக் – ஊஷி எஸ்.எச்.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரது பேரனும், ஹாஃபிழ் எஃப்.ஷெய்க் ஸலாஹுத்தீன் என்பவரது மகனுமான ஹாஃபிழ் எஸ்.எஸ்.உமர் ஃபாரூக் ஃபஹ்மீ – இக்கல்லூரியில் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து தேர்ச்சி பெற்றமைக்காக – இவ்விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்றார்.
இவ்விழாவில் உள்ளூர் பொதுமக்களுடன், பட்டம் பெறும் மாணவர்களது ஊர்களிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மகளிருக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. 13.30 மணிக்கு விழா நிறைவுற்றது. பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.எஸ்.உமர் ஃபாரூக் ஃபஹ்மீ – ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்று வந்ததைப் பாராட்டும் வகையில், அவர் சார்ந்த குருவித்துறைப் பள்ளிவாசலில் அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
‘அக்கு ஹீலர்’ ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தூத்துக்குடி முத்து கதீஜா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி & ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தொடர்ந்து, ஹாமிதிய்யா பைத் பிரிவு மாணவர்கள் பைத் பாடி நகர்வலமாகச் சென்று அவரை இல்லம் சேர்த்தனர்.
இந்நிகழ்ச்சிகளில், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
|