காயல்பட்டினம் பரிமார் தெரு சாலை, லெட்சுமிபுரம் முதன்மைச் சாலை ஆகியவற்றைத் தற்காலிக அடிப்படையில் சீரமைத்திட, காயல்பட்டினம் நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ஆம் நாளன்று - பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பரிமார் தெரு மற்றும் லட்சுமிபுரம் மெயின் சாலை ஆகியவற்றை, தற்காலிக அடிப்படையில் சீரமைக்க, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
இரு பணிகளுக்குமான மதிப்பீடு, தலா 9.90 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
123.63.242.116/kayalpattinam/ என்ற இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி விபரங்களை, மே 7 முதல் மே 22 வரை பதிவிறக்கம் செய்யலாம். மே 23 - மாலை 3 வரை ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படும். மே 23 மாலை 3:30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.
இணைப்பு:
(1) ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
(2) பரிமார் தெரு சாலை சீரமைப்பு விபரம்
(3) லட்சுமிபுரம் மெயின் சாலை சீரமைப்பு விபரம்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 8, 2018; 6:45 pm]
[#NEPR/2018050803]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|