4.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றால், கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது என்ற அரசின் தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - மே 3 அன்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
நேற்று (மே 9) மாலை வரை, 36,559 மாணவர்கள், இணையவழியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
கடந்த பதிவில், குடும்பத்தில் முதல் பட்டதாரி (First Graduate Tuition Fee Concession) எனில், கல்விக்கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் திட்டம் குறித்து பார்த்தோம்.
அது போல - முழுமையாக கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படும் மற்றொரு திட்டம் AICTE TUITION FEE WAIVER திட்டமாகும். (AICTE என்பது பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அரசமைப்பாகும்.)
இந்த திட்டத்தின் மூலம், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதி பிரிவுகள் ஆகியவற்றில் பயில - கல்விக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். இந்த திட்டம், ஆண்டொன்றுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு பொருந்தும்.
மேலும் - இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்லூரியிலும் 5 சதவீதம் வரை இடம் ஒதுக்கப்படலாம்.
இந்த சலுகையை கோர, இணையவழியில் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் - இந்த சலுகையை தேர்வு செய்யவேண்டும்.
இந்த திட்டப்படி , தங்கள் BE / BTECH படிப்பை முடிக்கும் வரை (நான்கு ஆண்டுகளும்), கல்வி கட்டணத்தில் முழு சலுகையை மாணவர்கள் பெறலாம். இந்த சலுகையை பெற்ற மாணவர்கள், இடையில் வேறு கல்லூரிக்கு மாற இயலாது.
7.2 AICTE Tuition Fee Waiver (TFW) Scheme
This scheme is applicable in Self-Financing Engineering Colleges and Self-Supporting courses in Government Aided Engineering Colleges only. AICTE Tuition fee waiver scheme is applicable for B.E. / B.Tech. courses only. Seats up to a maximum of 5 percent of sanctioned intake per course may be available under the scheme. Tuition fee waiver under First Graduate scheme is provided by Government whereas, AICTE TFW scheme is provided by the Management of the Institution. Sons and daughters of parents whose annual income is less than Rs. 4.50 lakhs from all sources shall only be eligible under this scheme.
All other fees except tuition fee will have to be paid by the candidate under both (7.1) & (7.2). Beneficiary student admitted under AICTE TFW scheme will not be allowed to change Institution / course under any circumstances.
(INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES; TAMIL NADU ENGINEERING ADMISSIONS 2018)
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 10, 2018; 10:30 am]
[#NEPR/2018051001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|