பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறத் தேவையான மதிப்பெண்கள், ஒவ்வொரு பிரிவினருககும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் ஆகியவற்றை விளக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - மே 3 அன்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இன்று மாலை வரை, 28,718 மாணவர்கள், இணையவழியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
இந்த கலந்தாய்வு சேர்க்கை வாயிலாக ---
---- BE / BTECH (4 ஆண்டுகள், 8 செமஸ்டர்)
---- BE (SANDWICH) (5 ஆண்டுகள், 10 செமஸ்டர்)
படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்த கலந்தாய்வுக்காக, பொறியியல் கல்லூரிகள் - இரு வகையாக பிரிக்கப்படுகின்றன.
(a) Category I
(i) Seats in Government Engineering Colleges
(ii) Seats in Aided courses in Government Aided Engineering Colleges
(iii) Seats in Central Electro Chemical Research Institute (CECRI), Karaikudi
(b) Category II
(i) Seats in Self-Supporting courses in Government Aided Engineering Colleges
(ii) Seats surrendered by Self Financing Engineering Colleges
(iii) Seats in Central Institute of Plastic Engineering and Technology (CIPET)
இந்த சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில், ACADEMIC அல்லது VOCATIONAL பிரிவுகளில் பயின்று - அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, PHYSICS, CHEMISTRY மற்றும் MATHS பாடங்களில், கூட்டாக -
--- ஆதி திராவிடர் / அருந்ததியர் / பழங்குடியினர் (SC/SCA/ST) = 40 சதவீதம்
--- மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) = 40 சதவீதம்
--- பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (இஸ்லாமியர் உட்பட) (BCM) = 45 சதவீதம்
--- பொது பிரிவினர் (OC) = 50 சதவீதம்
பெற்றிருந்தால், இந்த கலந்தாய்வுகளில் கலந்துக்கொள்ளலாம்.
ஒரு கல்லூரியில் உள்ள மொத்த இடங்களில் -
--- பழங்குடியினர் = 1 சதவீதம்
--- அருந்ததியர் = 3 சதவீதம்
--- ஆதிதிராவிடர் = 15 சதவீதம்
--- மிகவும் பிறப்படுத்தப்பட்ட பிரிவினர் = 20 சதவீதம்
--- பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் = 3.5 சதவீதம்
--- ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் = 26.5 சதவீதம்
--- எப்பிரிவினருக்கும் ஒதுக்கப்படாத இடம் = 31 சதவீதம்
இடங்கள், ஒதுக்கப்படும்.
இது தவிர,
--- ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் குடும்பம்
--- மாற்று திறனாளிகள்
--- தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்
ஆகியோருக்கும், சிறப்பு ஒதுக்கீடு உண்டு. விபரங்கள் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 7, 2018; 9:00 pm]
[#NEPR/2018050702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|