வெளிநாடு வாழ் இந்தியர்களது பிள்ளைகள் அண்ணா பலக்லைக் கழக வளாகக் கல்லூரிகளில் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பிப்பதற்கு ஜூன் 15 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சில - அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. அதில் முக்கியமானவை கீழ்க்காணும் நான்கு கல்லூரிகள் ஆகும்:
இந்த கல்லூரிகளில்,
-- வளைகுடா நாடுகளில் பணிப்புரியும் இந்தியர்களின் குழந்தைகள் (CHILDREN OF INDIAN WORKERS IN GULF COUNTRIES)
-- வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NON RESIDENT INDIANS)
-- வெளிநாட்டு பிரஜைகள் (FOREIGN NATIONALS)
ஆகியோருக்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: ஜூன் 15
விண்ணப்பம் செய்ய இணையதளம்:
https://www.annauniv.edu/cia/
பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதி பட்டியல் (MERIT LIST) தயார் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த திட்டத்தின் கீழ், இக்கல்லூரிகளில் பயில வசூல் செய்யப்படும் கட்டணம், தமிழக மாணவர்களுக்கான பொது இட ஒதுக்கீடு மூலம் சேரும் மாணவர்களிடம் வசூல் செய்யப்படும் கட்டணத்தை விட, பல மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டு - இந்த திட்டம் மூலம், ஒவ்வொரு துறையிலும் பயில, மாணவர்களுக்கான CUT OFF மதிப்பெண்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 5, 2018; 2:00 pm]
[#NEPR/2018050501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |