அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான இணையவழி மாணவர் சேர்க்கை மே 03 அன்று துவங்கியுள்ளதாக, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - நேற்று (மே 3) துவங்கியது.
பதிவு செய்ய இறுதி நாள் - மே 30
இணையதள முகவரி:
https://tnea.ac.in/onlineapp18/index.php
இவ்வாண்டு, மாணவர் சேர்க்கை இணையவழியில் முற்றிலும் நடக்கும் என்றும், கலந்தாய்வுக்காக மாணவர்கள் சென்னை வரத்தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் - மாணவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க, மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்கள் (Tamil Nadu Engineering Admissions Facilitation Centre - TFC) அறிவிக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள மையத்திற்கு சென்று, மாணவர்கள் சான்றிதழ்களை சரி பார்க்கலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 4, 2018; 3:00 pm]
[#NEPR/2018050402]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|