தமது கோரிக்கையை ஏற்று, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் பணிக்கான அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பியமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குழுமம் சார்பில் நேரில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு என நான்கு இடங்கள் (SANCTIONED POSTS) உள்ளன (சமீபத்தில் கூடுதல் இரண்டு இடங்கள் வழங்கப்பட்டுள்ளது). பல மாதங்களாக 2 - 3 இடங்கள், இங்கு காலியாகாவே இருந்து வந்தன. இதனால் இம்மருத்துவமனையை பயன்படுத்தும் பொது மக்கள் - கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இது சம்பந்தமாக, கடந்த சில மாதங்களாக - சுகாதாரத்துறையின் அனைத்து மட்ட அதிகாரிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து, நடப்பது என்ன? குழுமம் மனுக்கள் வழங்கிவந்தது. அதன் பயனாக, காலியிடங்கள் கடந்த சில மாதங்களாக நிரப்பப்பட்டு வந்தன.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான நான்காவது இடம் - கடந்த மாதம் இறுதியில் நிரப்பப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நடப்பது என்ன? குழுமம் வைத்த கோரிக்கைகளை ஏற்று - காலியிடங்களை நிரப்பிட உத்தரவுகள் பிறப்பித்த தமிழக அரசின் சுகாதாரத்துறையின் முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS, DIRECTOR OF MEDICAL AND RURAL HEALTH SERVICES (DMS) டாக்டர் இன்பசேகரன் மற்றும் DIRECTOR OF PUBLIC HEALTH (DPH) டாக்டர் குழந்தைசாமி ஆகியோரை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக, தொடர்ந்து ஆதரவு வழங்கும்படியும் வேண்டுகோள் வைத்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 2, 2018; 10:00 pm]
[#NEPR/2018050203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|