காயல்பட்டினம் அருணாச்சலபுரம் ஆதி திராவிடர் குடியிருப்பில், நகராட்சியின் சார்பில் பல மாதங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறையை – பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவாகத் திறந்துவிடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு 1 பகுதியான அருணாச்சலபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் காலனி பகுதியில் - பல மாதங்களுக்கு முன்பு, பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டது.
சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த பொது கழிப்பிடம், இன்றைய தேதி வரை, பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
காலதாமதம் செய்யாமல், இந்த கழிப்பிடத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்திடக்கோரி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு இன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 30, 2018; 10:00 pm]
[#NEPR/2018043004]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|