தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் காயல்பட்டினம் பகுதி வழித்தடம் மிகவும் மோசமான நிலையிலிருப்பதைச் சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – சென்னையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கூடுதல் தலைமைச் செயலரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (SH 176) - பல இடங்களில் பழுதடைந்துள்ளது. இது சம்பந்தமாக கடந்த சில மாதங்களாக, பலமுறை புகார் மனுக்கள் வழங்கப்பட்டும், முழுமையான நடவடிக்கைகளை - நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு, தாயிம்பள்ளி அருகில் உள்ள பகுதியில் மட்டும் சில பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. இருப்பினும் - அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி, ஹாஜியப்பா பள்ளி, எல்.கே.காலனி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பேருந்து நிலையம் அருகில் உட்பட பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள சாலையை - இதுவரை புனரமைக்கவில்லை.
இச்சாலையின் தற்போதைய நிலையை உணர்த்தும் படங்கள், இதுவரை வழங்கப்பட்டுள்ள மனுக்களின் நகல்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழங்கிய பதில்களின் நகல்கள் ஆகியவற்றுடன் இன்று சென்னையில் நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் - தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் IAS அவர்களிடம் விரிவான புகார் மனுவினை வழங்கினர்.
அதனை தொடர்ந்து, இத்துறையின் இணைச் செயலர் திரு ஜீவானந்தன் அவர்களை சந்தித்து, இச்சாலையின் நிலைமையை, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். விபரங்களை கேட்டறிந்த இணைச் செயலர், இது சம்பந்தமாக - நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பேசுவதாக உறுதி அளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 2, 2018; 8:00 pm]
[#NEPR/2018050202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|