காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸைத் தாண்டிய சாலைப் பகுதியில், புதுச் சாலை அமைப்பதற்காக பழைய சாலை கிளறியெடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பல நாட்களாகப் பெரும் பள்ளம் காணப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதி வழியே நடந்தும் – வாகனங்களிலும் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பற்றாக்குறைக்கு, தற்போது அங்கு குடிநீர் பகிர்வுக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பெருமளவில் சாலையில் வழிந்தோடிய வண்ணம் உள்ளது.
தகவல்:
ஜாஃபர் ஸாதிக்
|