காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மனுவைத் தொடர்ந்து, அருணாச்சலபுரம் பொதுக் கழிப்பிடத்தில் துப்புரவுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்குள் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுமென்றும் நகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு 1 பகுதியான அருணாச்சலபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் காலனி பகுதியில் - பல மாதங்களுக்கு முன்பு, பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டது. சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த பொது கழிப்பிடம், இன்றைய தேதி வரை, பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இது சம்பந்தமாக - திங்களன்று (ஏப்ரல் 30), காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்திடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
அக்கழிப்பிடத்தை துப்புரவு செய்யும் பணிகளை நகராட்சி இன்று துவக்கியுள்ளது. துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மூன்று தினங்களுக்குள் - அக்கழிப்பிடம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்த் இன்று நடப்பது என்ன? குழுமத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 2, 2018; 6:30 pm]
[#NEPR/2018050201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|