காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டமை குறித்து - நகராட்சி நிர்வாகத் துறையின் உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சீராக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து குறைகளும் சரி செய்யப்பட்டு, முழு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக வழங்கப்படும் குடிநீர் - கலங்கிய நிலையில் உள்ளது. குடிப்பதற்கோ, சமையலுக்கோ பயன்படுத்தக்கூடிய நிலையில் குடிநீர் இல்லாமல் இருந்தது.
இது குறித்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்திடம் விசாரித்தததில், தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதாகவும் இரண்டு தினங்களில் சரிசெய்யப்படும் என்றும் சனிக்கிழமை தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இந்த பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆணையரிடம் இன்று மாலை விசாரித்ததில், குடிநீர் விநியோகம் சீரடைய துவங்கிவிட்டது என்றும், மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நிறைவு பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் - இன்று விநியோகிக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்த புகைப்படம் - நகராட்சி தரப்பில் இருந்து தரப்பட்டது. அவை இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 30, 2018; 8:30 pm]
[#NEPR/2018043003]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|