காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
DCW தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, SDPI அமைப்பு ஏற்பாட்டில், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நேற்று மாலை (ஏப்ரல் 28) 5:00 மணியளவில் - மஹாத்மா காந்தி வளைவு அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் - SDPI அங்கத்தினர், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், முன்னாள் 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன், நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி, சட்ட விதிமுறைகளை மீறி செயலாற்றி வரும் DCW தொழிற்சாலையினை நிரந்திரமாக மூடிட கோரி கண்டன குரல் எழுப்பினர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 29, 2018; 12:30 pm]
[#NEPR/2018042902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|